தமிழ்நாட்டில் நேற்று 12 இடங்களில் சதமடித்த "வெயில்"..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 12 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெப்பம் பதிவானது.

மேலும் சென்னை மீனம்பாக்கத்தில் 103.1 டிகிரியும், கடலூரில் 100.4 டிகிரி, ஈரோடு 102.56 டிகிரி, மதுரை நகரம் 101.48 டிகிரி, மதுரை விமான நிலையம் 102.2 டிகிரி, சேலம் 100.58 டிகிரி, தஞ்சாவூர் 100.58 டிகிரி, திருப்பத்தூர் 102.2 டிகிரி, திருச்சி 101.66 டிகிரி, திருத்தணி 101.12 டிகிரி மற்றும் வேலூரில் 104 டிகிரி என 12 நேற்று 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Temperature hundred degree above in 12 places of tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->