ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது?.. புதிய தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 2022-2023 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 8ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.

இதனையடுத்து பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியிருந்தது. அந்த சுற்றறிக்கையில், நிர்வாக காரணங்களுக்காக பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. 

மேலும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு வரும் மே 15 ஆம் தேதி முதல் மே 26 ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher General Transition Counseling date announced


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->