பள்ளி மாணவனைக் கடத்திய ஆசிரியை - செல்போன் என்னால் சிக்கிய அவலம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நண்பர் வீட்டிற்குச் சென்ற அவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. 

இது தொடர்பாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் படி, போலீஸார் விசாரணை நடத்தியதில் காணாமல் போன மாணவனுக்கும், அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வரும் இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டதும், ஆசிரியை மாணவனை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் ஆசிரியையின் செல்போன் எண்ணை வைத்து சோதனை செய்ததில் அவர் நீலகிரி மாவட்டம் காரமடையில் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனை மீட்டு ஆசிரியை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், ஆசிரியை சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஹெப்ஷீபா என்பதும், மாணவர் படிக்கும் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருவதும், ஹெப்ஷீபாவுக்கு ஏற்கெனவே 2018-ம் ஆண்டு பிஜில்ஜெரோன் என்பவருடன் திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருவது விசாரணையில் தெரியவந்தது.

அப்போதுதான், ஆசிரியை ஹெப்ஷீபாவுக்கு, மாணவன் மீது காதல் ஏற்பட்டு இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். நேற்று முன்தினம் மாணவரை அழைத்துக் கொண்டு நீலகிரிக்கு தப்பி ஓடியது தெரியவந்தது.‌ உடனே போலீஸார் ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher arrested for kidnape school student in chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->