தஞ்சை சிறப்பு ரயில் இரண்டு நாட்களுக்கு ரத்து.! - Seithipunal
Seithipunal


தஞ்சையில் இருந்து கர்நாடக மாநிலம் ஹூப்ளி வரை இயக்கப்படும் தஞ்சை சிறப்பு ரயில் நாளை மற்றும் நாளை மறுநாள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் "ஜோலார்பேட்டை-பெங்களூர் இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ஹூப்ளியில் இருந்து இரவு 8:25 மணிக்கு புறப்பட வேண்டிய ஹூப்ளி-தஞ்சாவூர் சிறப்பு விரைவு ரயில் (எண்: 07325)ஆனது நாளை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோன்று மறு மார்க்கத்தில் தஞ்சாவூரில் இருந்து இரவு 7:40 மணிக்கு புறப்படும் தஞ்சாவூர்-ஹூப்ளி சிறப்பு ரயில் (எண்: 07326) நாளை மறுநாள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது" என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tanjore special train canceled for two days


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->