அடுத்த ட்விஸ்ட்.. தேர்தல் அதிகாரியின் செய்தியாளர்கள் சந்திப்பு திடீர் ரத்து.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று மாலையுடன் நிறைவு பெற்ற நிலையில் 6 மணிக்கு முன்பு வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களின் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

இதற்கிடையே இரவு 7 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பின்போது தமிழ்நாட்டில் மாலை 7 மணி நிலவரப்படி சராசரியாக 72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவித்திருந்தார். 

இதனால் தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் தமிழ்நாட்டில் 69.4 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 

இது தமிழக தேர்தல் காலத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழப்பத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இன்று காலை 11 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே திடீர் திருப்பமாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் செய்தி குறிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu Electoral officer press meet cancelled


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->