தேசிய அளவில் தமிழகம் 4வது இடம்.. மத்திய அரசு தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்வதில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள் மேல் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், மத்திய அரசும் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க மானியம் வழங்கி வருகிறது. இதனால் பெரிய நிறுவனங்கள் தங்களிடம் உள்ள இடத்தில் ஒரு மெகாவாட்டுக்கு மேலான திறனுடைய சூரியசக்தி மின் நிலையத்தை அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழக மின்வாரியத்துக்கு விற்பனை செய்கிறது. 

இந்நிலையில், மத்திய மின் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,12,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்திலும், 7,970 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து கர்நாடகா இரண்டாவது இடத்திலும், 7,180 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து குஜராத் மூன்றாவது இடத்திலும், 5067 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் 4வது இடத்தில் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu 4th place in solar power


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->