''உலக பட்டினி தினம்'' - தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வருகின்ற 28ஆம் தேதி அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினி இல்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும். 

 

அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்ற 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

மாவட்ட, அணி, நகரம், ஒன்றிய, கிளை மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்பட அனைவரும் தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி மக்கள் நற்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilaga Vetri Kazhagam world hunger day donation


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?




Seithipunal
--> -->