போக்குவரத்து ஊழியர்கள் கைதால் தமிழகம் முழுவதும் பதற்றம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை அரசுதான் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் எனவும், நாங்கள் எப்படி பேச்சுவார்த்தைக்கு அழைக்க முடியும் எனவும் சிஐடியு மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தமிழம் முழுவத்தும் அங்காங்கே மறியலில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.


தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலத்தில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று புதுக்கோட்டையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர். ஈரோடு பேருந்து நிலையத்தில் சாலையை மறித்து போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர்கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் காஞ்சிபுரம் பேருந்து முன்பு அமர்ந்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றது. தமிழகத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிய நிலையில் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால், நேற்று தமிழகம் முழுவதும் 95% அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu transport workers arrest


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->