#BREAKING : வளர்ச்சியில் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழ்நாடு முதலிடம் - இந்தியா டுடே கருத்துகணிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் பெரிய மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளின் தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியா டுடே நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் மாநிலங்களின் செயல்பாடுகள் குறித்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 5 ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பொருளாதாரம், மருத்துவம், விவசாயம், கல்வி, உட்கட்டமைப்பு வசதி,  சட்டம் ஒழுங்கு, சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பிரிவுகளில் இந்தியா டுடே நிறுவனம் பெரிய மற்றும் சிறிய மாநிலங்களைப் பட்டியலிட்டது.

இந்த பட்டியலில் 1303.5 புள்ளிகளுடன் தமிழகம் முதல் இடத்திலும், 1257.2 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேச மாநிலம் 2 ஆவது இடத்திலும், அண்டை மாநிலமான கேரளா 1252 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், பாஜக ஆளும் மாநிலமான குஜராத் 1226 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளன.

அதேபோல், சிறந்த உட்கட்டமைப்பு வசதியில் கடந்தாண்டு 4 ஆவது இடத்திலிருந்த தமிழகம் இந்தாண்டு 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மேலும், மருத்துவத்தில் கடந்த ஆண்டு 5-வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல், சுகாதாரத்தில் 7-வது இடத்திலிருந்த தமிழகம் இந்தாண்டு 3 ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. 

அதோபோல், பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் குஜராத்தும், 2வது இடத்தில் தமிழகமும் உள்ளது. கடந்த ஆண்டு தமிழகம் 4வது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu tops in growth for 5th consecutive year India Today survey


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->