தமிழகத்தில் ''97% பேருந்துகள்'' இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக ஈடுபட்டுள்ளனர். 

இதனால் ஒரு சில மாவட்டங்களில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு தற்காலிக ஓட்டுநர்கள் நடத்துனர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது

இந்நிலையில் தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 97.92% பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 

எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என ஒரு பக்கம் தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். 

மற்றொருபுறம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேருந்து சேவை வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

தற்காலிக ஓட்டுநர்கள், நடத்தினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் 9:00 மணி நிலவரப்படி 97.92% பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu 97 per Buses Operate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->