தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு 'ஜெஎன்.1' வகை கொரோனா உறுதி!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 4 பேருக்கு ஜெஎன் 1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா வேகமாக பரவுவதோடு நோய் தடுப்பாற்றலையும் ஊடுருவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல்வேறு உலக நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் கொரோனா தொற்று உடன் பிற நோய் தொற்றுகளும்  அதிகரிப்புக்கும் இந்த திரிபு காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலக அளவில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பல நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 63 பேருக்கு ஜேஎன் 1 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதில் கோவா 34 பேர், மகாராஷ்டிரா 9 பேர், கர்நாடகா மாநிலத்தில் 8 பேர், கேரளா 6 பேர், தமிழகத்தில் 4 பேருக்கும் இந்த வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த புதிய வகை தொற்று முதன் முதலில் கேரளத்தைச் சேர்ந்த 79 வயது மூதாட்டிக்கு உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu 4 people confirmed JN1 corona


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->