தொழிலாளர் நல ஆணையரிடம் புகார் அளிக்க சென்ற ஸ்விக்கி ஊழியர்கள்! - Seithipunal
Seithipunal


ஸ்விக்கி நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தொழிலாளர் நல ஆணையரிடம் புகார் அளிக்க சுமார் 400க்கும் மேற்பட்ட ஸ்விக்கி ஊழியர்கள் சென்றுள்ளனர்!

ஸ்விக்கி நிறுவன ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாராந்திர ஊக்கத்தொகையில் மாற்றம் கொண்டு வந்து புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. புதிய நடைமுறை மூலம் அதிக பணிச்சுமை மற்றும் குறைந்த வருவாய் என சென்னையில் உள்ள ஐந்து மண்டல ஸ்விக்கி ஊழியர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இன்று காலை 11 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்விக்கி கார்ப்பரேட் நிறுவன பிரதிநிதிவுடன் போராட்ட குழு சார்பாக 6 பேருக்கு கொண்ட குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் எந்தவித சுமுகமான முடிவுகளும்  எட்டப்படவில்லை. 

ஸ்விக்கி நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள நடைமுறையை மாற்ற இயலாது, முடிந்தால் வேலை செய்யுங்கள் இல்லை என்றால் வேலை விட்டு செல்லுமாறு கூறியுள்ளது. 

இதனை அடுத்து ஸ்விக்கி ஊழியர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் தொழிலாளர் நலத்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்க உள்ளனர். பழைய நடைமுறை பின்பற்றுவது ,வாராந்திர ஊக்கத்தொகை ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்க உள்ளதாக தெரியவருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Swiggy employees went to complain to the Labor Commissioner


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->