வெடிக்கும் போராட்டம்.. பெங்களூருக்கு நடைபயணம்.. ஸ்விக்கி ஊழியர்களால் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்று கூறி ஊழியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். 

இன்று அவர்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக நசரத்பேட்டையில் இருந்து ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ள பெங்களூருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்விக்கி ஊழியர்கள் நடைபயணம் மேற்கொண்டனர். 

அப்பொழுது அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதில், "புதிய நடைமுறையை கொண்டு வந்து எங்களது சம்பளத்தை குறைக்க முயற்சிக்கிறார்கள். எனவே பழைய சம்பள முறை இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். இதுவரை எந்த முடிவும் வெளியாகவில்லை. 

தொழிலாளர் நல ஆணையரிடம் புகார் அளிக்க சென்ற ஸ்விக்கி ஊழியர்கள்! - Seithipunal

சென்னை தலைமை அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் இருக்கிறது. அங்கு சென்று கோரிக்கை வைத்த போதும் எங்களை புதிய நடைமுறைக்கு பழகி சொல்லி வலியுறுத்துகின்றனர். இதனை தொடர்ந்து, பெங்களூருக்கு நடை பயணம் செல்கிறோம். பழைய நடைமுறையில் ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை வேலை செய்யும்போது குறிப்பிட்ட தொகை வரும். 

ஆனால் தற்போது புதிய நடைமுறையில் பகுதி நேரம் செய்பவர்களுக்கும், முழுநேரம் செய்பவர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு இத்தனை உணவு டெலிவரி செய்தால் குறிப்பிட்ட தொகை கொடுப்பதாக கூறுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே, இந்த கோரிக்கையை ஏற்கவில்லை., என்றால் நிறுவனத்தை விட்டு வெளியேறுவோம்." என்று கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

swiggy employees walk to bengalore


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->