குட் நியூஸ்... ஸ்டான்லி, தர்மபுரி மருத்துவக் கல்லூரிகள் இயங்க அனுமதி.!! - Seithipunal
Seithipunal


சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, தர்மபுரி மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பேராசிரியர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி இளநிலை மருத்துவ படிப்பிற்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவர் ஆணையத்தின் இளநிலை மருத்துவர் கல்வி வாரியம் ரத்து செய்தது. அதேபோன்று புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யப் போவதாக நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் ஒரு சில அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக பயோமெட்ரிக் வருகை பதிவேடுகள் சீர் செய்யப்பட வேண்டும், தேசிய மருத்துவ ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ள பேராசிரியர்கள் எண்ணிக்கைக்கும் மருத்துவமனையில் பணியாற்றும் பேராசிரியர்களின் எண்ணிக்கைக்கும் ஒத்துப்போக வேண்டும், பயோமெட்ரிக் வருகை பதிவேடுக்கு அருகே சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் தேசிய மருத்துவ கல்வி ஆணையத்திடமிருந்து சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவ கல்வி ஆணையத்தின் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டதால் அதற்கான அறிக்கையை கடந்த வாரம் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் அனுப்பியதன் அடிப்படையில் தேசிய மருத்துவக் கல்லூரி ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட இரண்டு மருத்துவக்கல்லூரிகள் தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகள் இயங்க மத்திய அரசு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மருத்துவ கல்லூரிக்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அதற்கான அங்கீகாரமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக முன்பு அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் "பொது கவுன்சிலிங் தொடர்பாக மாநில அரசு சார்பில் எதிர்த்து கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய அரசு பொது கவுன்சிலிங் இல்லை. மாநில அரசுகளே மருத்துவ கவுன்சிலிங் நடத்திக் கொள்ளலாம் என இன்று பதில் அனுப்பியுள்ளனர். மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்னை ஸ்டான்லி மற்றும் தர்மபுரி மருத்துவக் கல்லூரிகளில் கள ஆய்விலும், காணொளி வாயிலாகவும் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது இரு கல்லூரிகளும் 5 ஆண்டுகளுக்கு செயல்பட அங்கீகாரம் வழங்கியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stanley Dharmapuri Medical Colleges allowed to functioning


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->