7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்த மிகபெரிய அங்கீகாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.! - Seithipunal
Seithipunal


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த தீர்ப்பு வெளியாகியிருக்கும் நிலையில், இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பானது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், சமூக நீதியை மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் இந்த ஆட்சி நிலைநாட்டி வருவதாகவும், இந்த ஆட்சி அமைந்த பிறகு, சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் கிடைத்திருக்கும் மூன்றாவது தீர்ப்பு இது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin opinion on reservation judgement


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->