உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்.. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்!
Special Stalin Scheme camp with you District Collector providing welfare scheme assistance to beneficiaries
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை நேரில் பார்வையிட்டு
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம், கணக்கம்பாளையம் ஊராட்சி,
சி.கே.கே மஹாலில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட
சிறப்பு முகாமினை நேரில் பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமிஇ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கைமனுக்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புத்திட்டத்தை தொடங்கி வைத்து, இச்சிறப்பு திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில்முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தூக்கநாயக்கன்பாளையம்,
கணக்கம்பாளையம் ஊராட்சி, சி.கே.கே மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின்திட்ட சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்துகோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இம்முகாமில் மனு அளித்தபயனாளிகளுக்கு உடனடி தீர்வாக பட்டா மாறுதல் ஆணை, குடும்ப அட்டையில் பெயர்நீக்கம், சாதிச் சான்றிதழ், மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான சான்றிதழ்கள்,வீட்டுவரி ரசீது சான்றிதழ் என 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில், கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் திரு.கவியரசு
உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Special Stalin Scheme camp with you District Collector providing welfare scheme assistance to beneficiaries