வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெற சிறப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கட் கடலில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடியில் மழை வெளுத்து வாங்கியது.

இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த வெள்ளநீரில் மக்களின் ஆவணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை சேதமடைந்தது.

இவற்றை இலவசமாக பெற சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, டிசம்பர் 28ம் தேதி மற்றும் 29ம் தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த சிறப்பு முகாம் தூத்துக்குடி வட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம், மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களில் நடைபெறுகிறது. இதேபோல், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special camp for recieved floods affected documents in thoothukudi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->