சிவாஜிகணேசனின் 95வது பிறந்தநாள் : மரியாதை செலுத்திய முதலமைச்சர்..! - Seithipunal
Seithipunal


இன்று நடிகர் சிவாஜி கணேசனின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள அவரின் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, துரைமுருகன், கே.என்.நேரு, மதிவேந்தன், எ.வ.வேலு, சென்னை மேயர் பிரியா, தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

கடந்த 2001ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக நடிகர் சிவாஜி கணேசன் காலமானார். அவரின் உடல் மண்ணுலகை விட்டு மறைந்தாலும், அவரது நடிப்பு தமிழ் சினிமா உள்ளவரை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பதும் அவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் தேசிய விருது பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivaji ganesan birthday CM respect


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->