செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன? - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பணப்பரிமாற்ற வழக்கில் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பலமுறை ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜி திடீரென தனது பதவியையும் ராஜினாமா செய்தார். 

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் “செல்வாக்கு மிக்கவராக செந்தில் பாலாஜி விளங்கி வருவதால், ஜாமீன் கிடைத்தால் அவர் சாட்சிகளை கலைக்கக் கூடும்.

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளனர். ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. ஆகவே, ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாததால், சூழ்நிலை மாறியுள்ளது. வெளிநாட்டுக்கு தப்பிவிடுவார் என்று சந்தேகப்பட்டால் யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளன” என்று குற்றம் சாட்டினார். 

இவ்வாறு இருதரப்பு வாதமும் நிறைவடைந்ததை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நாளை வழங்குவதாக கூறி நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். நாளைய தினம் செந்தில் பாலாஜி வெளியில் வந்துவிடுவாரா? என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthil balaji bail case judgement postponed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->