சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு வந்த செந்தில் பாலாஜி - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சட்ட விரோத பணம் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம்தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து அவர் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தற்போது இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இதற்கிடையே சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு சமீபத்தில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி இன்று மீண்டும் உடல் நலக் குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சக்கர நாற்காலியில் உட்கார வைத்து அழைத்து வரப்பட்டார். இன்று இரவு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நாளை காலை அவர் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சம்பவம் திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthil balaji admitted stanli hospital at chennai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->