பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும் - போக்குவரத்து துறை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வரும் ஜூன் 7ம் தேதி முதல் அனைத்து  மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதில் மாணவர்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வரும் 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ் ஜூன் மாதம் வழங்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில் பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட இலவச பஸ் பாஸ் பயண அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணம் செய்யலாம்.

மேலும், சீருடை அணிந்திருந்தாலோ அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School uniform wear students allowed to govt bus


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->