ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்!! முக்கிய கோரிக்கையை ஏற்க தமிழக அரசு முடிவு!! - Seithipunal
Seithipunal


தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியரியர் இயக்கங்களின் கூட்டு  நடவடிக்கை குழு பேரமைப்பு சார்பில் கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த தீர்மானத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை முழுமையாக மேற்கொள்ளாத வகையில் ஆன்லைன் பதிவேற்றங்கள் கற்பித்தல் பணி நேரத்தை அபகரித்து வருகிறது. இந்த திட்டம் ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வித்தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிடவேண்டும்.

ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்கு இடையூறாக இருப்பதோடு, ஆசிரியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமை உருவாகி கடும் மனஉளைச்சலை ஏற்படுத்தும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் ஆன்லைன் பதிவேற்றப்பணிகளில் இருந்தும், EMIS, TNSED APP மூலம் நடைபெறும் பதிவேற்றம் பணிகளில் இருந்தும் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக விடுவித்துக்கொள்வது என டிட்டோஜேக் பேரமைப்பு ஒருமனதாக முடிவு செய்து அறிவித்திருந்தது. 

இந்நிலையில் ஆசிரியர்களும் கற்பித்தல், நிர்வாகம், எழுத்து, ஒருங்கிணைத்தல் பணிகள் சார்ந்து பல்வேறு கோரிக்கைகள் அனைத்திற்கும் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இணையதளம் வழியாக ஆசிரியர்கள் கோரிக்கைகளை அனுப்பும் புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் ஐஏஎஸ் இந்தத் திட்டத்தைக் கொண்டு வர முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பள்ளிக் கல்வித்துறை பணியாளர்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைப் இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் அல்லது கோரிக்கை ஏற்கப்படுகிறதா? நிராகரிக்கப்படுகிறதா? என இணையதளம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வந்தால் ஆசிரியர்களின் பணிச்சுமை மெதுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School education dept introduce new app for teachers grievance


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->