சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் தர்ணாவில் இறங்கிய மக்கள்! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றதில் பொதுமக்கள் வீட்டு மனை பட்டா மட்டும் உதவி தொகை கேட்டு மனு அளித்தனர்:

சேலம் மாவட்டத்தில் இன்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்றதில் கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். 

அப்போது சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நரியனூர் காலனியை சேர்ந்த பாக்கியலட்சுமி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா கேட்டு இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கொடுத்த மனுவில், ''ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த ஏழை மக்களாகிய நாங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு குடியிருக்க வீடு இல்லாமல் ஒரே வீட்டில் 3, 4 குடும்பங்கள் அடைபட்டு கிடக்கிறோம். 

இது குறித்து 10 ஆண்டுகளாக மனு கொடுத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசுக்கு சொந்தமாக குண்று நிலம் பள்ளிப்பட்டி பகுதியில் அதிகமாக உள்ளதால் அந்த நிலத்தில் ஆதிதிராவிட நலத்துறை மூலம் இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க செய்ய வேண்டும்'' என, குறிப்பிட்டிருந்தனர்.

இதே போல் பெரியேரி காடு பகுதியைச் சேர்ந்த விதவைப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற 30 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது,  உதவித் தொகையை ரூ.1500 உயர்த்தி வழங்குவது மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என பல கொரிக்கைகள் கொண்ட மனுவை அளித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem collector office housing loan assistance


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->