தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய புதிய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் நியமனம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தியமைப்பு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில் "தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசரின் தலைமையில் உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.தணிகாசலம் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பதவி விலகல் கடிதத்தை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். 

அவர்களது பதவி விலகலை ஏற்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் வி.பாரதிதாசன் அவர்களையும் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான கருத்தைபாண்டியன், ஜெயராமன், சுடலைகண்ணன், மேக்ராஜ் ஆகியோரையும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற மதியழகன் மற்றும் திருப்பூர் மாவட்டம் கண்ணப்பன் மாரியப்பன் கல்லூரி முதல்வர் எஸ்.பி.சரவணன் ஆகியோரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Retjudge barathidasan appointed as new head of BC commission


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->