திருச்சி விமான நிலையத்தில் அரியவகை பாம்பு, பல்லிகள் பறிமுதல் - அதிரடி காட்டும் அதிகாரிகள்.! - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்தில் அரியவகை பாம்பு, பல்லிகள் பறிமுதல் - அதிரடி காட்டும் அதிகாரிகள்.!

தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஒன்று திருச்சி விமான நிலையம். இந்த விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் மேற்கண்ட நாடுகளிலிருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. 

அப்படி இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம் மற்றும் அரியவை உயிரினங்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்கும் விதமாக சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

அந்த வகையில், நேற்று இரவு மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அங்கு இந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். 

அப்போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீன் என்ற பயணி சந்தேகம் படும் விதமாக நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது 47 அரியவகை பாம்பு மற்றும் 2 பல்லி வகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பறிமுதல் செய்யப்பட்ட பாம்பு மற்றும் பல்லியை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rare species snake and lizards seized in trichy airport


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->