ராமநாதபுரத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை - அமைச்சர்கள் ஆய்வு! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வருவதால் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கலோனியர் பங்களா அருகில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இந்த பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைச்சர்கள் கே.என் நேரு, பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர். 

பின்னர் இது குறித்து அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ''வருகின்ற 17,18 ஆம் தேதிகளில் முதல்வர் மு.க ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பா.ம.க முதல்வர் கூட்டம் 17ஆம் தேதி அன்று முதல்வர் பங்கேற்க உள்ளார். இதனை தொடர்ந்து 18 ஆம் தேதி மண்டபம் கலோனியர் பங்களா அருகில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதல்வர் மீனவர்களை சந்தித்து பேச உள்ளார். 

அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது'' என தெரிவித்தனர். மேலும் இந்த ஆய்வில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினரும் ஆன காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி எம்.எல்.ஏ, உதவி மாவட்ட ஆட்சியர், தி.மு.க மாநில விவசாய அணி துணை செயலாளர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramanthapuram ministers review progress works


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->