மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை..ஏனாம் பகுதிக்கு அமைச்சர் தலைமையில் குழுவை அனுப்பி வைக்க வேண்டும்!
Rain precaution measures A team should be sent to the affected area under the leadership of the minister
பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரு அமைச்சர்களையும் மற்றும் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவையும் உடனடியாக ஏனாம் பகுதிக்கு அனுப்பி, புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் மேற்பார்வை செய்ய ஏற்பாடு செய்யுமாறு அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு. ஓம் சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்,
இதுகுறித்து அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திரு. ஓம் சக்தி சேகர் அவர்கள் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது:மோந்தா புயலின் தாக்கம் அதிகரித்து, அது ஆந்திரா மாநிலத்தைத் தாக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணி நேரத்துக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி பிராந்தியத்தின் ஏனாம் பகுதி பாதிப்பு அதிகமாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதி, பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இரு அமைச்சர்களையும் மற்றும் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவையும் உடனடியாக ஏனாம் பகுதிக்கு அனுப்பி, புயல் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் மேற்பார்வை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
.
English Summary
Rain precaution measures A team should be sent to the affected area under the leadership of the minister