திமுகவின் ரகசியத்தை உடைத்தார்.!அதிமுகவில் இணைந்த ராதாரவி.! பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


திமுகவில் இருந்து விலக்கப்பட்ட ராதாரவி, இன்று அதிமுகவில் இருந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, ராதாரவி முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் எனது நன்றி. மேலும், என்னை இணைக்க முயற்சித்த கடம்பூர் ராஜூவிற்க்கும் நன்றி என தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் அதிமுகவின் இரட்டை தலைமை பிரச்சினை உள்ளது குறித்து கேள்வி எழுப்பவே,  இன்றுதான் கட்சியில் சேர்ந்தேன் மாலையிலேயே கட்சியை விட்டு எடுக்க இதுபோன்ற கேள்வி கேட்கிறீர்கள் என கலாய்த்து விடவே, சிரிப்பலை மூண்டது.

பின்னர், திமுக குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், "குறிப்பிட்ட விஷயத்திற்காக அவர்கள் நீக்கவில்லை. சினிமா விழாவில் பேசியதை பெரிது படுத்தி விட்டனர். நடிகர் சங்கத் தேர்தலுக்காக நான் பாக்கியராஜ ஆதரித்து நாடக நடிகர்களிடம் பேசியபோது ,என்னை ஆதரிக்க கூடாது என்று திமுக தலைமை கூறியதை அறிந்தேன். இதனால்தான் அதிமுகவிலிருந்து இணைய முடிவு எடுத்தேன்.

Image result for stalin seithipunal

திமுக நடிகர் சங்க தேர்தலில் தலையிடுகிறது. நடிகர் சங்கத் தேர்தலில் இருக்கும் பொழுதே இது குறித்து நான் அறிந்தேன். ஸ்டாலிநிற்கு இதெல்லாம் தெரியுமா என்று கூட எனக்கு தெரியவில்லை. 

உண்மை என்னவென்றால் திமுகவில் தான் இரட்டை தலைமை இருக்கின்றது. யார் அந்த இரட்டை தலைமை என்பதை நான் அறிவிக்க இயலாது. முடிந்தால் நீங்களே கண்டு பிடித்துக் கொள்ளுங்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

radharavi press meet about dmk


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal