ஆன்லைன் மூலம் காலாண்டு தேர்வு! பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி, ஆமீம்புரத்தில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 

தற்போது அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த பள்ளியில் எழுத்து முறை தேர்வு வைக்காமல் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. 

இதனால் இன்று மாணவர்களின் பெற்றோர்கள், எழுத்து திறன் குறைவதோடு மட்டுமல்லாமல் செல்போன் பயன்படுத்துவதால் கண் பார்வை திறனும் பாதிக்கப்படும் என தெரிவித்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். இது தொடர்பாக பெற்றோர்கள் தெரிவித்திருப்பதாவது, குழந்தைகள் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆன்லைனில் படிப்பது வேறு. 

ஆனால் சாதாரண காலகட்டத்தில் எழுத்து வடிவில் தேர்வு நடத்தாமல் ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்துகின்றனர். இணையதளம் முடக்கம் ஏற்படும் போது 2,3நாட்கள் ஒரே தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

மேலும் குழந்தைகளின் பார்வை திறன் குறைபாடு ஏற்படுவதால் காலாண்டு தேர்வு எழுத்து முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். 

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். பள்ளி சார்பில் மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Quarterly Exam through Online Parents protesting school


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->