"என் புள்ளைய மயக்கிட்ட" மாமியார் அவதூறு.. மருமகள் பிணமாக, மகன் உயிருக்கு போராட.. தாய் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தின் சன்னியாசி குப்பம் பகுதியில் ஆனந்த் என்பவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் எட்டு மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பின்னர் சன்னியாசி குப்பத்தில் ஆனந்த், சந்தியா மற்றும் அவரது தாயார் அன்னக்கிளி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். மகன் காதல் திருமணம் செய்தது அவரது தாய் அன்னக்கிளிக்கு பிடிக்கவில்லை. இதனால், அடிக்கடி மருமகள் சந்தியாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். 

சமீபத்தில் மாமியார், மருமகள் சந்தியாவை பார்த்து என் மகனை மயக்கி தன்னிடம் இருந்து பிரித்து வைத்திருக்கிறார் என்று மோசமாக திட்டியுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த சந்தியா சம்பவ தினத்தில் தங்களது அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

காலையில் ஆனந்த் எழுந்து பார்த்த நிலையில் 5 மாத கர்ப்பிணி மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரும் அதே அறையில் மற்றொரு சேலையில் தூக்கு போட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதை கண்ட தாய் அன்னக்கிளி, சத்தம் போட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆனந்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

தனது மோசமான பேச்சால் மருமகள் உயிரிழக்க மகன் உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளதால் குற்ற உணர்ச்சியில் இருந்த அன்னக்கிளி வீட்டிலிருந்த சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டார். 

மருத்துவமனைக்கு சென்ற உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அன்னக்கிளி சடலமாக தொங்கியுள்ளார். இது குறித்து, காவல்துறையினர் தகவலறிந்து விரைந்து வந்து மாமியார் மற்றும் மருமகள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pudhucherry mother in law scolding daughter in law and hole family suicide


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->