வாக்கு திருட்டுக்கு எதிராக போராட்டம்..காங்கிரஸ் கட்சி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வாக்கு திருட்டில் ஈடுபட்டு வரும் தேர்தல் ஆணையம்., மற்றும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் சார்ப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

 சமீப காலமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார் ஆளும் கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் இதற்காக தேர்தல் ஆணையமும் ராகுல் காந்திக்கு தக்க பதிலடி கொடுத்தது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கண்டனத்தை தெரிவித்தது இந்த நிலையில் மேலும் தேர்தல் ஆணையம் மீது தனது அதிருப்தியை ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார் பாஜகவின் ஒரு அணியாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். 

மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்.குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள்,பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றசாட்டு கூறிவருகிறார். வாக்கு திருட்டு தொடர்பாக பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும்,தற்போது தான் 100 சதவீதம் ஆதாரத்தை கண்டறிந்துள்ளோம். ஜனநாயக நடைமுறைகளை பாதுகாப்பதற்காகவே இதனை நான் செய்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


இந்தநிலையில் வருகின்ற சனிக்கிழமை 20.09.2025 மாலை 4 மணிக்கு காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் ஓட்டு திருட்டில் ஈடுபட்டு வரும் BJP அரசுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வேலை பார்க்கும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும்., NR-பாஜக அரசுகளின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும்., ஊழல்களை வெளிப்படுத்தியும்.,  புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாவதை எதிர்த்தும் நடைபெற இருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் வெ.வைத்திலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

 ஆகவே., இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, வட்டார மற்றும் முன்னணி அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protest against vote theft Congress party announcement


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->