மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டு மழைப்பொழிவை விட அதிக மழை இந்த ஆண்டில்தான் அதிகம் பொழிகிறது. அந்த வகையில் இந்த பருவ மழையின் முதல் மழைப்பொழிவு கடந்த 30-ந்தேதி முதல் தொடங்கி தமிழகத்தின் வடமாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. 

இந்த மழையினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்து வரும் நிலையில், தனியார் பள்ளிகளில் மீண்டும் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அந்தவகையில், மாவட்ட நிர்வாகம் தொடர் விடுமுறை அளிக்கப்படுவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படும் என்பதால் ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளனர். 

ஏற்கனவே ஆன்லைன் வழியில் வகுப்புகள் நடத்த தடை இல்லை என்று  பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இத்தகைய நடைமுறையானது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

private schools start online class for holidays


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->