அரசு விரைவு பேருந்துகளில் தனியார் விளம்பரம் செய்ய அனுமதி.! - Seithipunal
Seithipunal


அரசு விரைவு பேருந்துகளில் தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு பேருந்துகளில் தனியார் விளம்பரம் செய்ய அனுமதிக்கப்படுவதால் மாதம்தோறும் 30 லட்சம் ரூபாய் கிடைக்கும் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் பேசியதாவது, கட்டண உயர்வு இன்றி, முதலீடுகள் இன்றி, வருவாய் பெறும் வகையில் அரசு பேருந்துகளில் தனியார் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்க உள்ளோம். தற்போதைய சென்னை மாநகர பேருந்துகளில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலம் மாதம் தோறும் ஒரு கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. 

அடுத்த கட்டமாக 250 விரைவு பேருந்துகளில் பக்கவாட்டு கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரம் செய்ய தனியார் நிறுவனங்களை தேர்வு செய்துள்ளோம். விரைவில் இதற்கான ஒப்பந்தம் செய்ய உள்ளோம். இதன் மூலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு மாதம்தோறும் 30 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private ad allowed to govt buses


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->