சசிகலாவின் விடுதலை.. அதிமுகவிற்கு எதிராக பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை கருத்து.! - Seithipunal
Seithipunal


சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா இன்று அதிகாரபூர்வமாக விடுதலை செய்யப்பட்டார். இவரது விடுதலையால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ள நிலையில், பெங்களூரில் அமமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர். 

சசிகலாவின் தமிழகம் வருகையை எதிர்பார்த்து அக்கட்சியினர் காத்திருக்கும் நிலையில், தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? அல்லது இதே நிலை எதிர்ப்புடன் தொடருமா? என்ற எதிர்பார்ப்புடன் அரசியல் கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், " சசிகலா அரசியல் செய்வது குற்றமல்ல. யார் யாரோ அரசியலில் இருக்கின்றனர். ஒரு பெண்ணாக சசிகலாவிற்கு எனது ஆதரவு உண்டு. எடப்பாடி அரசியலால் முதல்வர் ஆகவில்லை, கட்சியினரால் முதல்வர் பதவிக்கு வந்தவர் " என்று கூறியுள்ளார். 

ஏற்கனவே அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி நிலைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பிரேமலதாவின் விமர்சனம் அதிமுகவினரிடயே பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் கூட்டணியை மாற்றி செல்ல தயாராக இருப்பதாகவும், நேரத்திற்காக காத்திருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Premalatha Vijayakanth Talks about Sasikala politics and Edappadi Palanisamy CM


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->