அரசு வேலையை ராஜினாமா செய்த போலீஸ் ஏட்டு - செய்தியாளர்களிடம் கூறிய பகீர் காரணம்.! - Seithipunal
Seithipunal


அரசு வேலையை ராஜினாமா செய்த போலீஸ் ஏட்டு - செய்தியாளர்களிடம் கூறிய பகீர் காரணம்.!

தமிழகத்தின் பாஜக மாநிலத் தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் தற்போது தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கிய இந்த நடைபயணம் அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம் 11 ஆம் தேதி சென்னையில் நிறைவடைய உள்ளது.

இந்த நடைப்பயணத்தின் போது அண்ணாமலை பொதுமக்களிடம் தங்களது கோரிக்கைகளை கேட்டறிவது, ஆய்வு செய்வது, மக்களுக்கு சேவை செய்வது என்று பல விஷயங்களை செய்து வருகிறார். இந்த நிலையில், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த வி.கார்த்திக் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்ணாமலையுடம் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்வதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ராமநாதபுரத்தில் பா.ஜ.க, மாவட்ட தலைவர் தரணி முருகேசனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:-

"76 வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் இந்த சமூகமும், நாடும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று சமூக ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். அந்த அறிக்கையை பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்க உள்ளேன். அடுத்த முதல்வர் அண்ணாமலை தான்.

அவருக்கு உதவ போலீஸ் தேவை. அதற்காகத்தான் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது குடும்பத்தினர் இப்போது வருத்தப்படுகின்றனர். கட்சியில் உயர்ந்த இடத்திற்கு போகும் போது சந்தோஷப்படுவார்கள்.

காவல்துறை வேலையில் மன அழுத்தம் இல்லை. பதின்மூன்று ஆண்டுகளாக நான் நேசித்து பணிபுரிந்தேன். மக்கள் சேவைக்காக காவல் பணியை ஒத்தி வைத்துள்ளேன். இன்று சமுதாயத்தில் எந்த கட்சி நன்றாக உள்ளது என்றால் அது பா.ஜ.க தான். அந்தக் கட்சியில் இணைய உள்ளேன்.

எனது ஆய்வில் தி.மு.க., அரசு குறித்து தெரிய வரும். அதன் மூலம் இந்த அரசே வேண்டாம், என்று மக்கள் கூறுவார்கள். லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் வேண்டும், என்று மக்கள் கூற அதிகம் வாய்ப்புள்ளது.

நான் ராஜினாமா கடிதம் கொடுக்க சென்ற போது, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இல்லை. இன்று வருமாறு கூறியுள்ளனர். நான் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police officer resigning job for join bjp party


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->