சூடு பிடிக்கும் தேர்தல் களம் - வேலூர் செல்கிறார் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிககள் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை பாண்டி பஜாரில் பிரமாண்ட வாகனப் பேரணியை நடத்தினார். 

இதையடுத்து இன்று காலை சென்னையில் இருந்து வேலூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு திரட்டுகிறார். அதன்பிறகு, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

பின்னர் பா.ஜனதா வேட்பாளர்கள் எல்.முருகன், அண்ணாமலை, கே.வசந்தராஜன், ஏ.பி.முருகானந்தம், கே.பி.ராமலிங்கம், கூட்டணி கட்சி வேட்பாளர்களான த.மா.கா.வை சேர்ந்த பி.விஜயகுமார், பா.ம.க.வை சேர்ந்த ந.அண்ணாதுரை ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். 
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு வேலூர், கோவை, மேட்டுபாளையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi going to vellore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->