ஹிந்திக்கு எதிராக போராடாத பெரியார்! உண்மையைப் போட்டு உடைத்து அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


வராத ரயில் பாதையில் தலையை வைத்து படுத்துக்கொண்டு போராடியவர்களின் வழித்தோன்றல் ஸ்டாலின்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரு தினங்களுக்கு முன்பு ஹிந்தி எதிர்ப்பு குறித்து பெரியாரின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அறிக்கை மூலம் வெளிக்கொண்டு வருவேன் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது "எப்போதெல்லாம் திமுக சரிவை நோக்கி பயணிக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் இந்தி எதிர்ப்பு. 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சி வந்ததற்கு அடித்தளமாக இருந்தது இந்தி எதிர்ப்பு தான் என்பதாலோ ஏனோ இன்று வரை தேவையற்ற நேரங்களில் இந்திய எதிர்ப்பு என்ற கூக்குரல் திமுக கூடாரத்தில் இருந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

1938 ஆம் ஆண்டு இந்தி மொழியை கட்டாயமாக்கிய ராஜாஜி அவர்களை எதிர்த்து குரல் எழுப்பியது ஈழத்து சிவானந்த அடிகளார். இன்று வரை அந்தப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியது பெரியார் தான் என்று திமுக பரப்பி வருகிறது. ஆனால் 1965 ஆம் ஆண்டு திமுக தேர்தலுக்கு முன்னெடுப்பாக மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. இந்தப் போராட்டத்தைப் பற்றி பெரியார் என்ன சொன்னார் என்று தமிழக முதல்வர் சொல்லாவிட்டால் என்ன நாம் சொல்லுவோம்.

"இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடந்த காலித்தனம். ஆரம்பத்திலே நான்கு காலிகளை சுட்டு இருந்தால் இந்த நாச வேலைகளும் இத்தனை உயிர் சேதமும் உடமை சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடி துப்பாக்கி? எதற்கு முத்தம் கொடுக்கவா? இது என்ன அரசாங்கம் வெங்காய அரசாங்கம்" என்று பேசியுள்ளார் பெரியார்.

"எனது இந்திய எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல. ஆங்கிலம் பொது மொழியாக அரசாங்க மொழியாக தமிழ் நாட்டு மொழியாக தமிழன் வீட்டு மொழியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்"இதை சொன்னதும் பெரியார் தான். 

தமிழ்மொழி உரிமைக்காக போராடி உயர் நீர்த்த தாளமுத்து, நடராஜன் மற்றும் டாக்டர் தருமாம்பாள் அவர்களின் குடும்பத்தார் இன்று திமுகவின் தலைவராக உள்ளார்களா குறைந்தபட்சம் முக்கிய பொறுப்புகளிலாவது உள்ளார்களா? அவர்களுக்கு அமைக்கப்பட்ட சமாதி கேட்பாரற்று பராமரிப்பின்றி இருக்கிறதே!. இந்திய எதிர்ப்பு என்ற பெயரில் வராத ரயில் பாதையில் தலையை வைத்து படுத்துக்கொண்டு போராடி அவர்களின் வழித்தோன்றலான திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்கள் இதற்கு பதில் அளிப்பாரா? என அண்ணாமலை தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyar who did not fight against Hindi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->