பழனி அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை.. மரத்தடியில் சிகிச்சை பெறும் நோயாளிகள்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் பழனி ஆகிய 2 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பழனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் திண்டுக்கல்லில் இருந்து வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பழனி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் 90 கோடி ரூபாய் மதிப்பில் பழனி அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் பிரிவிற்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர்.

இந்த நிலையில் பழைய கட்டிடங்களை எடுத்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதால் உள்நோயாளிகளுக்கு தகர்த்தலான தற்காலிக செட் அமைத்து அங்கு தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அங்கு இடப்பற்றாக்குறை காரணமாக மேலும் சிலர் மரத்தடியில் படுக்க வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வார்டுகளை இடித்து விட்டதால் மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள பொதுக்கழுப்பறையை அனைவரும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும், அங்கு குடிநீர் வசதியும் சரிவர செய்து தரப்படவில்லை.

பகலில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தகரசெட்டுகளுக்குள் தங்கியிருக்கும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கட்டுமான பணிகள் நிறைவடைய இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை நோயாளிகள் நகர செட்டுக்குள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கட்டுமான பணிகள் முடியும் வரை நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய சிகிச்சை கிடப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Patients treatment under tree in pazhani govt hospital


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->