போலி சான்றிதழ் மூலம் தில்லுமுல்லு: ஊராட்சி செயலாளர் மீது அதிரடி நடவடிக்கை!   - Seithipunal
Seithipunal


தர்மபுரி எஸ்.பி அலுவலகத்தில் நல்லம்பள்ளி தாசில்தார், 10 ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு தேர்ச்சி பெறாமல் போலியான மதிப்பெண் சான்றிதழை வைத்து ஊராட்சி செயலாளராக சேர்ந்துள்ளதாக மனு கொடுத்தார். 

அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது தர்மபுரி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எர்ரபையன அள்ளி ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். 

இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பண்டஹள்ளி அரசு மேல்நிலை ப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் நல்லம்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் செயலாளராக சேர்ந்து பணியாற்றி வருகிறார். 

அவரது பத்தாம் வகுப்பு மதிப்பு சான்றிதழின் உண்மை தன்மை அறிய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு தேர்வு துறை உதவி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அவர்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி கார்த்திகேயனின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. அதில் கார்த்திகேயன் பத்தாம் வகுப்பு பாடத்தில் 27 மதிப்பெண் எடுத்ததாகவும் அதனை திருத்தம் செய்து 47 மதிப்பெண் பெற்றுள்ளதாக பொய்யான சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் தெரிய வந்துள்ளது. 

அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் தர்மபுரி எஸ்.பி உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், போலி சான்றிதழ் மூலம் பணியாற்றிய கார்த்திகேயன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

போலிச் சான்றிதழ் மூலம் ஊராட்சி செயலாளராக பணியாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

panchayat secretary submitting fake certificate against case


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->