பிபிஇ உடைகள், மருத்துவ கழிவுகளுடன் துள்ளி விளையாடும் குரங்குகள்.. ஊட்டியில் ஷாக்.!! - Seithipunal
Seithipunal


ஊட்டியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கொரோனா சிகிச்சை மையமானது கடந்த திங்கட்கிழமை முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது இங்கு 50 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த மையத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள், தங்களை கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சுய பாதுகாப்பு உடைகள் ஆன பி.பி.இ உடைகளை அணிந்து  பணியாற்றி வருகின்றனர். 

இந்த நிலையில், இந்த உடைகள் அலட்சியமாக கையாளப்படுவது தற்போது தெரியவருகிறது. பயன்படுத்தப்பட்ட மருத்துவ பாதுகாப்பு உடைகள் முறையாக அழிக்கப்படாமல், அங்கேயே வைத்து இருப்பதன் காரணமாக குரங்குகள் இந்த வளாகத்திற்குள் நுழைந்து வனப்பகுதிக்குள் தூக்கி செல்லும் சம்பவம் நடைபெற்று வருகிறது. 

மேலும், பயன்படுத்தப்பட்ட கவச உடைகள், மாத்திரைகள், ஊசிகள் போன்றவற்றை குரங்குகள் வனப் பகுதிக்கு எடுத்து செல்லும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ooty hospital issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->