தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் யு.பி.ஐ. வசதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த ஓராண்டாக கூட்டுறவு துறையில் எடுத்த தொடர் முயற்சிகளினால், தமிழ்நாட்டில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 54 கிளைகள், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகள் அனைத்திலும் ஐ.எம்.பி.எஸ்.கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த வசதி நாட்டிலேயே தமிழகத்தில் தான் அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் அனைத்து கூட்டுறவுத் துறையிலும் யு.பி.ஐ. வசதியும் கொண்டு வரப்படுகிறது. 

இந்த யு.பி.ஐ வசதி மூலம் கூகுள் பே, பே.டி.எம் மற்றும் பி.எச்.ஐ.எம். உள்ளிட்ட அனைத்து பண மாற்ற பரிவர்த்தனை வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online remittance intro operative banks in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->