அடேங்கப்பா கோடி ரூபாயா?! சென்னை இளம்பெண்ணிடம் கைவரிசை! உ.பி., கல்லூரி மாணவன் கைது! - Seithipunal
Seithipunal


உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை என தெரிவித்து ரூ.1.6 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருங்குடியைச் சேர்ந்த இளம் பெண். இவர் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். தற்போது அவரது குழந்தைகளை கவனிப்பதற்காக நீண்ட விடுமுறையில் இருந்தார். 

இந்நிலையில் ஆன்லைன் பகுதி நேர வேலை தருவதாக வாட்ஸப் மற்றும் டெலிக்ராம் செயலிகள் மூலம் ஒரு நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதை நம்பிய இந்த பெண் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூ.66,22,450-ஐ அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவர் செலுத்திய எந்த தொகையும் அவருக்கு திரும்ப வரவில்லை. 

இதன் மூலம் அவர் மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இது குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். 

புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். 

முதற்கட்ட விசாரணையில், தொடர்புடைய நபரின் செல்ஃபோன் எண் மற்றும் வங்கி கணக்கு போன்றவற்றை சேகரித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், மோசடி செய்த நபரின் வங்கி கணக்கு மனிஷ்குமார் என்ற பெயரில் இருந்ததும் அந்த வங்கி கணக்கை அவரது மகன் ரிதம்சவ்லா பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. 

பின்னர் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் உத்தர பிரதேச மாநில ரேபரேலி என்ற பகுதிக்கு போலீசார் தனிப்படை அமைத்து சென்று விசாரணை நடத்தினர். 

அப்போது அங்குள்ள குருநானக் நகரில் கல்லூரி மாணவர் பதுங்கி இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் கல்லூரி மாணவரை கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு செல்போன்கள் ஒரு லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். 

அவரிடம் நடத்திய விசாரணையில் பொதுமக்களிடம் இருந்து பெற்ற ரூ.1.6 கோடி பணத்தை ஆன்லைன் பகுதி நேர வேலை மூலம் மோசடியில் ஈடுபட்டு முதலீடு செய்திருப்பதை ஒப்புக்கொண்டார். 

அவரை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார், கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் மீது மும்பை தானேவில் ஏற்கனவே வழக்கு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து காவல் ஆணையர் தெரிவிக்கையில், 'ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி டெலிகிராம் தொடர்பான முதலீடுகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

online part time job fraud College student arrested


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->