நல்லது செய்ய யாரும் கூப்பிட தேவையில்லை... விஜய் கட்சியில் இணையும் பிரபல நடிகர்! - Seithipunal
Seithipunal


எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்யக்கூடியவர் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி. இவர் தமிழிலும், தெலுங்கிலும், பிசியாக நடித்து வருகிறார்.  தளபதி விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் என்று கட்சிக்கு , திரைத்துறையில்  இருந்து பெரிய வரவேற்பு இல்லை. அவர் கட்சி தொடங்குவதாக அறிவித்த போது, வாழ்த்து கூட யாரும் தெரிவிக்கவில்லை.  வெற்றிக்கு க் வருமா என்பது குறித்து சமூக ஊடகங்களில்  அலசி ஆராய்ந்து வரும் நிலையில், ஒருசிலர் விஜய் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

காசி விஸ்வநாதரை தரிசிக்கு தென்காசி மாவட்டம் சென்றிருந்த இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கணியிடம் பத்திரிகையாளர்கள் நடிகர் விஜயின் அரசியல் குறித்த கேள்வி எழுப்பினார்கள்.  அதற்கு அவர்,  விஜய் அரசியலுக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக   இருக்கிறது. அவருக்கு இத்தனை பெரும் புகழை கொடுத்த சமூகத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என விஜய் நினைப்பது வரவேற்க தக்கது என்றார். 

மேலும், தேவைப்பட்டால் நல்ல விஷயங்களுக்கு நானும் சேர்ந்து செயல்பாடுவேன்.  விஜய் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரத்தின் போது உங்களை அழைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்விக்கு, யோசிக்காமல்  நல்ல விஷயத்திற்காக யாருமே கூப்பிட தேவையில்லை, நானே சென்று விடுவேன் என சமுத்திரக்கனி பதில் அளித்தார்.   இந்த விஷயம் இபோது விஜய் ரசிகர்களுக்கு  உற்சாகத்தை கொடுத்துள்ளது. 2026 சட்ட மன்ற தேர்தலில் இன்னும் பல நடிகர் நடிகைகள் வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

No one needs to call to do good… Famous actor joining Vijay's party!


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->