சூரியனை 40 நிமிடம் காத்திருக்க சொன்னேன்., என்னை மதித்து நடந்துகொண்டான்..!! நித்தியானந்தாவின் அல்டிமேட் அலப்பறைகள் வீடியோ.!!  - Seithipunal
Seithipunal


நித்தியானந்தா.... நித்தியானந்தா என்ற பெயரை கேட்டாலே நம்மில் பலருக்கு நியாபகம் வருவது ஆன்மிகம் மற்றும் நகைசுவை கலந்த சமாளிப்பு தான். பல நகைச்சுவையை தொடர்ந்து மேற்கொண்ட நித்தியானந்தா வாட் இஸ் மீ என்ற தலைப்பிற்கு பல விதமான சமாளிப்பை செய்து வந்த நிலையில்., இதனை கண்ட இணையதள நெட்டிசன்கள் தங்களின் கைவரிசையை காட்டினர். 

இந்த நிலையில்., பல வருடங்களுக்கு முன்னர் வெளியான நித்தியானந்தா - ரஞ்சிதா தொடர்பான வீடியோ காட்சிகளுக்கு இன்றளவும் தனது அறிய மகிமையால் மக்களை கவர்ந்து தனக்கென ஒரு பதிலை கூறி தனக்குத்தானே சிரிப்பது வழக்கமாகிவிட்டது. இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால்., சிரித்தே சமாளிப்பது எப்படி என்பதை கூட நாம் நிதியானத்திடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். 

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூட வெளியான வீடியோ காட்சியில்., அயல்நாட்டு சிறுவன் ஒருவனின் கேள்விக்கு சிரி சிரி என சிரித்துவிட்டு பின்னர் ஒரேயொரு கேள்வியில் என்னை காலிபண்ணிவிட்டான் என்று கூறி பின்னர் சமாளித்ததும் அனைவரும் கண்டு மகிழ்ந்த ஒன்றாகும். இந்த நிலையில்., நான் தியானம் செய்ய நேரம் எடுத்ததால் எனக்கு காத்திருந்து சூரியன் உதித்ததாக கூறியது மீண்டும் பெரும் வைரலாகியுள்ளது. 


இது குறித்து அந்த வீடியோ பதிவில்., நான் தியானம் செய்ய சிறிது கால அவகாசமாகிவிட்டது. எனக்காக சூரியன் காத்திருந்து., எனது தியானம் நிறைவுபெற்றவுடன் உதித்தான். நான் சூரியனிடம் ஏற்கனவே தியானம் முடியும் வரை நீ உதிக்க கூடாது என்று உத்தரவிட்டேன். எனது ஆணைக்கு இணங்கிய சூரியன் தாமதமாக உதித்தான். இதனை நீங்கள் நம்பவில்லை என்றால் கூகுளில் சென்று தேடி பாருங்கள். 40 நிமிடம் சூரியன் தாமதமாக உதித்தது தெரியவரும். இதனை கேட்டு வழக்கம்போல புல்லரித்த கோடான கோடி பக்தர்களும்., பக்தைகளும் கைதட்டி ஆரவாரம் எழுப்பினர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithiyandha speech about sun rise waiting for her yoga complete


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->