பிரதமர் வருகையால் வேலூரில் இதற்கெல்லாம் தடை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை இப்போது தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரிக்க தமிழகம் வர உள்ளார். 

அந்த வகையில் நாளை வேலூர் மற்றும் சென்னையில் நடைபெறும் வாகன பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேருக்கிறார். இதன் காரணமாக வேலூர் மாநகராட்சிக்குள்இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் ட்ரோன் மற்றும் ராட்சச பலூன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதே பன்று வேலூர் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் பத்தாம் தேதி காலை 5 மணி முதல் பிற்பகல் 12:00 மணி வரை கணரக வாகனங்கள் வேலூர் நகரத்தில் சேர்ந்த தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது வேலூர் நகருக்குள் நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New restrictions imposed in Vellore due to Narendra Modi visit


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->