வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்க புதிய திட்டம்.! - Seithipunal
Seithipunal


வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்கும் வகையில் 10 ரூபாய் வைப்புத் தொகை செலுத்தும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில்,

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களால் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும், பூங்காவில் உள்ள விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களும், ஸ்டிக்கர் ஒட்டி 10 ரூபாய் திரும்பப்பெறும் வைப்பு தொகையாக பெறப்பட்டு, பின்பு பயன்படுத்திய ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களில் கொடுத்து வைப்புத் தொகை 10 ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு உலக சுற்றுசூழல் தினம் 'ஒரே ஒரு பூமி' என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகின்றது.

இதனையொட்டி உயிரியல் பூங்காவின் அனைத்து ஊழியர்களையும் ஒருங்கிணைத்து 'ஒரு நபர் ஒரு மரம்' என்ற நோக்கத்துடன் மரக்கன்றுகள் நடப்பட்டது. இது வெப்பமயமாதல், கால நிலை மாற்றம் மற்றும் பூங்காவில் பசுமையான சூழலை மேம்படுத்தும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

உயிரியில் பூங்காவில் உள்ள 350 பணியாளர்களும் தாங்கள் தேர்ந்தெடுத்த மரக்கன்றுகளை நியமிக்கப்பட்ட பகுதிகளில் நட்டுள்ளனர். மேலும் அனைவரும் தாங்கள் நட்ட மரக்கன்றுகளை பராமரித்து வளர்க்க உறுதி ஏற்றுக்கொண்டனர். 

மேலும் நிலையான மேலாண்மை நடைமுறையை நோக்கி, பூங்காவில் இருக்கும் நீர்தொட்டிகளில் மீன் வளர்ப்பு முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முயற்சி பூங்காவிற்குள் இருக்கும் நீர் பறவைகள் மற்றும் முதலைகளின் அன்றாட மீன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New project in Vandalur zoo


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->