நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் - உதவிய போலீஸ் அதிகாரி..! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் தெற்கு காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக இருப்பவர் இளவரசி. இவர் இன்று அதிகாலை 2 மணிக்கு பணிக்கு வந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்தார். அப்போது, போலீஸ் நிலையதிற்கு எதிரே உள்ள ஜவுளி கடை அருகே பெண் ஒருவர் அழுது கொண்டு இருந்தார். 

அந்த பெண் அழும் சத்தத்தை கேட்ட தலைமை காவலர் அவரது அருகில் சென்று பார்த்தார். அப்போது அங்கு ஒரு பெண் பிரசவ வலியால் அழுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இளம் பெண்ணுடன் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்று இருந்தது.

உடனே காவல் நிலையத்திற்கு வந்த இளவரசி அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் பத்மநாபன், பெண் போலீஸ் சாந்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு சென்று பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். 

பிரசவத்தில் அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லாண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயும் சேயும் நலமாக உள்ளனர். 

இதுகுறித்து இளம் பெண் தெரிவித்ததாவது, திருமணம் ஆன சில மாதங்களில் கணவர் தன்னை விட்டு  சென்றதாகவும், தனது அண்ணன்கள் பிச்சை எடுத்து பணம் தரம் வேண்டும் என வற்புறுத்துவதாகவும் தெரிவித்தார். இதனால் இப்பகுதியில் பிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, பெண் காவல் அதிகாரி இளவரசி குழந்தைக்கு தேவையான உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்தார். ஆதரவற்ற பெண்ணிற்கு போலீசார் பிரசவம் பார்த்த சம்பவம் வேலூரில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near vellore midnight lady cry for labor pain police help


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->