நாகர்கோவில் : அரசு பேருந்து மீது கல் வீச்சு நடத்திய வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து மிடாலத்துக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த பேருந்தில் ஓட்டுநராக ஆணையடி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவரும், நடத்துனராக ஐரேனிபுரம் ஜஸ்டின் என்பவரும் பணியாற்றினார்கள். 

இந்நிலையில், இந்த பேருந்து இரணியல் அருகே சென்றுகொண்டிருந்த போது, இருளில் மறைந்திருந்த இரண்டு பேர் பேருந்து மீது கல் வீசினர். இதனால், பேருந்தின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கிச் சென்று பார்த்தனர்.

ஆனால், அதற்குள் கல் வீச்சு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் போலீசில் புகார் அளித்தனர். அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். 

அதில், இரண்டு பேர் மது போதையில் தள்ளாடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன்படி, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வில்லுக்குறி சடையப்பனார் தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near nagarkovil youth arrested for govt bus attack


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->