கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பிறந்த குழந்தையை ஆட்டோவில் விட்டு சென்ற இளம்பெண்.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தை சேர்ந்தவர் காதர். இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில் இவர், நேற்று மாலை செங்குன்றம் ஆட்டோ நிறுத்தத்தில் சவாரிக்காக நின்று கொண்டிருந்த போது இளம்பெண் ஒருவர், கைக்குழந்தையுடன் வந்து கோயம்பேடுக்கு செல்ல வேண்டும் என்று காதரிடம் தெரிவித்துள்ளார். 

அதன் படி, அவர், அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கிய அந்த பெண், ஆட்டோ ஓட்டுநர் காதருக்குத் தெரியாமல் தான் வைத்திருந்த கைக்குழந்தையை ஆட்டோவின் பின்பக்க இருக்கையில் வைத்துவிட்டு இறங்கி சென்று விட்டார். இதையறியாத காதர், ஆட்டோவை ஓட்டிக்கொண்டு செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தார். 

அப்போது அவர் மாதவரம் ரவுண்டானா அருகில் வந்துக்கொண்டிருந்தபோது, திடீரென ஆட்டோவில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் ஆட்டோவை உடனடியாக நிறுத்தி பார்த்தார். அதில், அந்த பெண் தூக்கி வந்த குழந்தை ஒரு துணியில் சுற்றப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்த காதர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆட்டோவில் இருந்த அந்த பச்சிளம் பெண் குழந்தையை கைப்பற்றி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து, சென்னை தியாகராயநகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டது. 

அதன் பின்னர், குழந்தைகள் நல காப்பக ஊழியர் லலிதா மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தையை பெற்றுக் கொண்டார். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவில் பச்சிளம் குழந்தையை விட்டுச் சென்ற அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் அவர், இது பெண் குழந்தை என்பதால் ஆட்டோவில் விட்டுச்சென்றாரா? அல்லது முறை தவறி பிறந்த குழந்தையா? என்று பல்வேறு கோணங்களில்  விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near koyambedu bus stand woman left baby in auto


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->