கோவில்பட்டி : 200 ரூபாய்க்கு பதில் 20 ரூபாயை வழங்கிய ஏடிஎம் - அதிர்ச்சியில் சுவிக்கி ஊழியர்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே தோணுகால் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்த சுவிக்கி நிறுவன ஊழியர் ஐயப்பன் என்பவர் நேற்று மாலை வந்துள்ளார். அங்கு தனது ஏடிஎம் கார்டு மூலம் 3,500 ரூபாய் பணம் எடுத்துள்ளார்.

அப்போது, அந்த ஏடிஎம் மையத்தில் இருந்து ஆறு 500 ரூபாய் நோட்டுக்கள், ஒரு 100 ரூபாய் நோட்டு, இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் என்று மொத்தம் 3,500 ரூபாய்க்கு பதில் ரூ.3,140 மட்டுமே வந்துள்ளது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஐயப்பன் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த மையத்தில் எந்த விதமான வாடிக்கையாளர் தகவல் மைய எண்ணும் இல்லாததால், அவர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அந்த ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர். அதன் பின்னர், அங்கு நின்று கொண்டிருந்த ஐயப்பனிடம் 20 ரூபாய் நோட்டு ஏடிஎம்மில் வருவதற்கு வாய்ப்பு இல்லை. 

இருப்பினும், இந்த ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவ்வாறு தவறு நடந்திருந்தால் இன்னும் மூன்று நாட்களுக்குள் தங்களது வங்கிக்கணக்கில் பணம் திருப்பி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், தனியார் ஏடிஎம் மையத்தில் 200 ரூபாய் நோட்டிற்கு பதில் 20 ரூபாய் நோட்டுகள் வந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kovilpatti 20 rupees notes instead for 200 rupees notes came in ATM center


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->